கோவை: கோவையில் அரசுப் பேருந்து மோதி உயிரிழந்த இளைஞரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் நீதிமன்ற உத்தரவுப்படி இன்று (மார்ச் 28) அரசு சொகுசுப் பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.
கோவை பொள்ளாச்சியை அடுத்த ஜமீன் ஊத்துக்குளியைச் சேர்ந்தவர் சதீஸ் (27). இவர், கடந்த 2018 பிப்ரவரி 3-ம் தேதி தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் உக்கடம் அருகே சென்றுகொண்டிருந்தார். அப்போது அரசு நகரப் பேருந்து (3டி) பின்புறமாக வேகமாக மோதி விபத்து ஏற்பட்டது. இருசக்கர வாகனத்தில் இருந்து பேருந்தின் அடியில் விழுந்த சதீஸ், சுமார் 50 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சதீஸ் உயிரிழந்தார்.
கோவையில் அரசுப் பேருந்து மோதி உயிரிழந்த இளைஞரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் நீதிமன்ற உத்தரவுப்படி இன்று (மார்ச் 28) அரசு சொகுசுப் பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.
Author: க.சக்திவேல்