Advertisement
கோவில்பட்டி: கீழவைப்பார் ஊராட்சியில் கிராம மக்களை அச்சுறுத்தி வந்த நாய், நேற்று காலையில் தெருவில் விளையாடிய குழந்தைகள், நடந்து சென்ற பெண்கள், முதியவர்கள் என, சுமார் 20 பேரை கடித்தது.
இதனால் கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர். பாதிக்கப்பட்ட மக்கள் உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே கிராம இளைஞர்கள் ஒன்று திரண்டு, அந்த வெறிநாயை விரட்டியடித்தனர்.
கீழவைப்பார் ஊராட்சியில் கிராம மக்களை அச்சுறுத்தி வந்த நாய், நேற்று காலையில் தெருவில் விளையாடிய குழந்தைகள், நடந்து சென்ற பெண்கள், முதியவர்கள் என, சுமார் 20 பேரை கடித்தது.
Author: செய்திப்பிரிவு
Advertisement