கோவில்பட்டி: கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஒரு வாரமாக குடிநீர் இல்லாததை கண்டித்து செவ்வாய்க்கிழமை மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 1500 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். கல்லூரியில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் மற்றும் இதர பயன்பாட்டுக்குரிய தண்ணீர் இல்லாமல் இருந்துள்ளது. இதுகுறித்து மாணவ மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் இன்று காலை 11 மணியளவில் திடீரென வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஒரு வாரமாக குடிநீர் இல்லாததை கண்டித்து செவ்வாய்க்கிழமை மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Author: எஸ்.கோமதி விநாயகம்