மரக்கன்றுகளை இலவசமாக வழங்கியதோடு கடமை முடிந்துவிட்டதாக நினைக்காமல் கொடுத்த மரக்கன்றுகளை ஒழுங்காக நட்டு வளர்க்கிறார்களா? என்று கண்காணித்து அதைச் சிறப்பாக வளர்க்கும் பள்ளிக் குழந்தைகளுக்கு தங்க நாணயங்களையும், ரொக்கப் பரிசாக ரூ.5 ஆயிரமும் வழங்கி அசத்தியிருக்கிறார்கள் அலங்காநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளியைச் சேர்ந்த முன்னாள் மாணவர்கள்.
பள்ளிக் குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுத்துவிட்டு தேசியக் கொடியேற்றுவது சுதந்திர தின விழாக்களில் வழக்கமாக நடக்கும் நிகழ்வுகள். ஆனால், கடந்த ஆண்டு அலங்காநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள், தற்போது படிக்கும் பள்ளிக் குழந்தைகளுக்கு அவர்கள் வீட்டில் கொண்டு வளர்ப்பதற்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்கி வித்தியாசமாக சுதந்திர தின விழாவைக் கொண்டாடினார்கள்.
கொடுத்த மரக்கன்றுகளை சிறப்பாக வளர்த்த பள்ளிக் குழந்தைகளுக்கு தங்க நாணயம், ரூ.5 ஆயிரம் பரிசு:
அலங்காநல்லூர் அரசுப் பள்ளி முன்னாள் மாணவர்களின் பசுமைப் பாசம்
ஒய்.ஆண்டனி செல்வராஜ்