இஸ்லாமாபாத்: வெளிநாட்டு தலைவர்கள் வழங்கிய பரிசு பொருட்களை விற்ற விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்ய நீதிமன்றம் வாரன்ட் பிறப்பித்துள்ளது. போலீஸார் கைது செய்ய சென்றபோது, அவர் தலைமறைவாகிவிட்டார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான், கடந்த 1996-ம் ஆண்டில் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியை (பிடிஐ) தொடங்கினார். கடந்த 2018-ம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பிடிஐ கட்சி ஆட்சியைப் பிடித்தது. அந்த நாட்டின் 22-வது பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றார்.
வெளிநாட்டு தலைவர்கள் வழங்கிய பரிசு பொருட்களை விற்ற விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்ய நீதிமன்றம் வாரன்ட் பிறப்பித்துள்ளது. போலீஸார் கைது செய்ய சென்றபோது, அவர் தலைமறைவாகிவிட்டார்.
Author: செய்திப்பிரிவு