Advertisement
கோழிக்கோடு: கேரளாவின் கோழிக்கோடு மாவட்டம் எலாத்தூர் அருகே கடந்த 2-ம் தேதி இரவு ஓடும் ரயிலில் பயணிகள் மீது தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் 9 பேர் காயம் அடைந்தனர். தப்பிக்கும் முயற்சியில் உயிரிழந்த 3 பேரின் உடல்கள் பிறகு தண்டவாளத்தில் இருந்து மீட்கப்பட்டன.
இந்த சம்பவத்தில் ஷாரூக் சைபி என்பவரை மகாராஷ்டிர மாநிலம் ரத்தினகிரியில் கேரள போலீஸார் கைது செய்தனர். ஷாரூக் சைபியை 11 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவுக்கு கோழிக்கோடு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
கேரளாவின் கோழிக்கோடு மாவட்டம் எலாத்தூர் அருகே கடந்த 2-ம் தேதி இரவு ஓடும் ரயிலில் பயணிகள் மீது தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் 9 பேர் காயம் அடைந்தனர்
Author: செய்திப்பிரிவு
Advertisement