Advertisement
தஞ்சாவூர்: கேரளத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு வழிபாட்டுக்கு வந்தபோது, தஞ்சாவூர் அருகே ஆம்னி பேருந்து சாலையோரம் கவிழ்ந்ததில் சிறுவன் உட்பட 2 பேர் உயிரிழந்தனர். 40 பேர் காயமடைந்தனர்.
கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து நாகை மாவட்டம் வேளாங்கண்ணி மாதா பேராலயத்துக்கு 51 பேருடன் நேற்று முன்தினம் ஆம்னி பேருந்து புறப்பட்டது. பேருந்தை சமீர் என்பவர் ஓட்டினார். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகேயு உள்ள ஒக்கநாடு கீழையூர் பகுதியில் நேற்று அதிகாலை வந்தபோதுசாலை வளைவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து கவிழ்ந்தது.
கேரளத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு வழிபாட்டுக்கு வந்தபோது, தஞ்சாவூர் அருகே ஆம்னி பேருந்து சாலையோரம் கவிழ்ந்ததில் சிறுவன் உட்பட 2 பேர் உயிரிழந்தனர். 40 பேர் காயமடைந்தனர்.
Author: செய்திப்பிரிவு
Advertisement