காலநிலை நெருக்கடியால் உலகின் அனைத்துப் பகுதிகளிலும் தொடர்ந்து இடர்கள் நேர்ந்துகொண்டிருக்கின்றன, மனித வாழ்வின் இருப்பு கேள்விக்குறியாகியிருக்கிறது. மழை, வெள்ளம், காட்டுத் தீ, வறட்சி, பொருளாதார நெருக்கடி, நாடுகளுக்கிடையே மோதல், மனிதத்தின் வீழ்ச்சி ஆகியவற்றை காலநிலை நெருக்கடியின் விளைவுகளாக நம் கண் முன்னே எதிர்கொண்டு வருகிறோம்.
காலநிலை நெருக்கடியால், குழந்தைகள் நலனில் ஏற்படும் சிக்கல்கள் குறித்து அச்சம் தரும் ஆய்வுகள் பல வெளியாகியிருக்கின்றன. இந்நிலையில், சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்று, உலகிலுள்ள ஒவ்வொரு குழந்தையும் காலநிலை நெருக்கடியால் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதாகவும், நேரடியாக அது அவர்களின் உடல்நலனில் பெரும் விளைவுகளை ஏற்படுத்துவதாகவும் அதிர்ச்சி தரும் முடிவுகளை வெளியிட்டுள்ளது.
குழந்தைகளின் ஆரோக்கியம், அவர்கள் வாழும் சூழல் மற்றும் எதிர்காலத்தை எந்தவொரு நாடும் பாதுகாக்கவில்லை.
நந்தினி வெள்ளைச்சாமி