குழந்தைகளுக்கு சுய பராமரிப்பு அவசியம். அது இல்லாவிட்டால் ஒரு குழந்தை ஆரோக்கியமாக வளர்வதில் சிக்கல்கள் ஏற்படும் எனக் கூறுகின்றனர் உளவியல் நிபுணர்கள். குழந்தைகள் என்பவர்கள் பெற்றோர்களால், பெரியவர்களால் வளர்க்கப்பட வேண்டியவர்கள் தானே அவர்களை எப்படி அவர்களாலேயே பராமரித்துக் கொள்ள இயலும் என்ற கேள்வி நமக்கு எழலாம்.
ஆனால், உளவியல் நிபுணர்களோ சுய பராமரிப்பு என்பது குழந்தைகள் மனப்பதற்றம், மன அழுத்தம் போன்ற உளவியல் சிக்கல்களுக்குள் சிக்கிவிடாமல் தடுக்கும். வாழ்க்கையில் தாங்கள் எதிர்கொள்ளும் சூழலையும், எதிர்நோக்கவிருக்கும் சவால்களையும் ஆரோக்கியமான முறையில் அணுக உதவும். அதனால் குழந்தைகளுக்கு அவர்களின் மிகச் சிறிய வயதிலிருந்தே சுய பராமரிப்பை சொல்லிக் கொடுக்க வேண்டும் எனக் கூறுகின்றனர். உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் சுய பராமரிப்பை மேற்கொள்ள பழக்கப்படுத்துங்கள் என்பதே அவர்களின் அறிவுறுத்தலாக இருக்கிறது.
சுய பராமரிப்பு குழந்தைகளுக்கு அவசியம் அது இல்லாவிட்டால் ஒரு குழந்தை ஆரோக்கியமாக வளர்வதில் சிக்கல்கள் ஏற்படும் எனக் கூறுகின்றனர் உளவியல் நிபுணர்கள். குழந்தைகள் என்பவர்கள் பெற்றோர்களால், பெரியவர்களால் வளர்க்கப்பட வேண்டியவர்கள் தானே அவர்களை எப்படி அவர்களாலேயே பராமரித்துக் கொள்ள இயலும் என்ற கேள்வி நமக்கு எழலாம்.
Authour: செய்திப்பிரிவு