சென்னை: திமுக மீதான குற்றச்சாட்டுகளுக்கு மன்னிப்பு கேட்பதுடன், ரூ.500 கோடி இழப்பீடு வழங்காவிட்டால் சிவில், கிரிமினல் வழக்கு தொடரப்படும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
திமுகவினர் 12 பேரின் சொத்து பட்டியல் என்று சில விவரங்களை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த 14-ம் தேதி சென்னையில் வெளியிட்டார். இந்நிலையில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் திமுக எம்.பி. வில்சன் நேற்று அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
திமுக மீதான குற்றச்சாட்டுகளுக்கு மன்னிப்பு கேட்பதுடன், ரூ.500 கோடி இழப்பீடு வழங்காவிட்டால் சிவில், கிரிமினல் வழக்கு தொடரப்படும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
Author: செய்திப்பிரிவு