சென்னை: வருமானத்துக்கான வழிகளை உருவாக்க வேண்டும். குறைந்தபட்சமாக கடன் பெற்று நல்லதிட்டங்களை, தேவையானவர்களுக்கு அளிக்க வேண்டும் என்பதே அரசின் முக்கிய இலக்கு என்று சட்டப்பேரவையில் அமைச்சர்பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் தமிழக பட்ஜெட் மீதான விவாதம் கடந்த 23-ம்தேதி தொடங்கி 27-ம் தேதிவரை நடந்தது. அதற்கு பதில் அளித்துநிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று பேசியதாவது: கடன் வாங்குவது மற்றும் விற்பனையை வங்கிக் கணக்கில் காட்டுவதற்கு ஏதுவாகவும், பணவீக்கத்துக்கு ஏற்பவும் நிலத்தின் வழிகாட்டி மதிப்பை உயர்த்தியுள்ளோம். தாலிக்கு தங்கம் திட்டத்தில் 4 ஆண்டுகள் நிலுவை தொடரக் கூடாது என்பதால் ‘புதுமைப்பெண்’ திட்டமாக மாற்றினோம்.
வருமானத்துக்கான வழிகளை உருவாக்க வேண்டும். குறைந்தபட்சமாக கடன் பெற்று நல்லதிட்டங்களை, தேவையானவர்களுக்கு அளிக்க வேண்டும் என்பதே அரசின் முக்கிய இலக்கு என்று சட்டப்பேரவையில் அமைச்சர்பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
Author: செய்திப்பிரிவு