கும்பகோணம்: கும்பகோணத்தைச் சேர்ந்த ஹெலிகாப்டர் சகோதரர்களின் வங்கி கணக்குகள் குறித்து பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இன்று(மார்ச் 17) விசாரணை மேற்கொண்டனர்.
கும்பகோணம் ஸ்ரீநகர் காலனி, தீட்சிதர் தோட்டத்தைச் சேர்ந்தவர் எம்.ஆர்.கணேஷ் (51). இவரது சகோதரர் எம்.ஆர்.சுவாமிநாதன் (48), இவர்கள் இருவரும் தங்களது வீட்டிலேயே நிதி நிறுவனத்தை நடத்தி வந்தனர். மேலும், ஹெலிகாப்டரை சொந்தமாக வைத்திருந்ததால் ஹெலிகாப்டர் சகோதரர்கள் என அழைக்கப்பட்டனர். இவர்களது நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் ஓராண்டில் பணம் இரட்டிப்பாக வழங்கப்படும் என கூறியதை அடுத்து கும்பகோணம் பகுதியில் பலரும் பல கோடி ரூபாய் முதலீடு செய்தனர்.
கும்பகோணத்தைச் சேர்ந்த ஹெலிகாப்டர் சகோதரர்களின் வங்கி கணக்குகள் குறித்து பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இன்று(மார்ச் 17) விசாரணை மேற்கொண்டனர்.
Author: சி.எஸ். ஆறுமுகம்