கும்பகோணம்: திருநாகேஸ்வரம் கடைத்தெருவில் இரவு முழுவதும் அனுமதியின்றி பார் செயல்படுவதால் பெண்கள் அவ்வழியாகச் செல்லமுடியவில்லை என்று குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்தனர்.
கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கோட்டாட்சியர் எஸ்.பூர்ணிமா தலைமை வகித்தார். நுகர்பொருள் வாணிபக் கழக துணை மேலாளர் டி. இளங்கோவன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் விவசாயிகள் கூறியது: “திருநாகேஸ்வரம் கடைத்தெருவிலுள்ள 2 டாஸ்மாக் கடைகளால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொது மக்கள் என அனைவரும் வேதனைக்குள்ளாகின்றனர். மேலும் இரவு முழுவதும் அனுமதியின்றி பார் செயல்படுவதால் இரவு நேரங்களில் பெண்கள் அவ்வழியாகச் செல்லமுடியவில்லை. அக்கடைகளை உடனே அகற்ற வேண்டும்.
திருநாகேஸ்வரம் கடைத்தெருவில் இரவு முழுவதும் அனுமதியின்றி பார் செயல்படுவதால் பெண்கள் அவ்வழியாகச் செல்லமுடியவில்லை என்று குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்தனர்.
Author: சி.எஸ். ஆறுமுகம்