புதுடெல்லி: குடிமைப் பணிக்கு தகுதியான நபர்களை தேர்ந்தெடுக்கும் நடைமுறைக்கு 15 மாதங்கள் ஆகிறது. இது நீண்ட நெடிய தேர்வு நடைமுறையாக உள்ளது. இதனால், மாணவர்களின் பொன்னான காலம் வீணடிக்கப்படுகிறது.
அத்துடன் குடிமைப் பணி தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்கள் மனதளவிலும், உடல்அளவிலும் சோர்வை சந்திக்கின்றனர். இதனால், அவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு, சிவில் சர்வீஸ் எனப்படும் குடிமைப் பணிக்கான தேர்வு, சுழற்சி நடைமுறைகளின் காலத்தை கணிசமாக குறைக்குமாறு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்திடம் (யுபிஎஸ்சி) நாடாளுமன்றக் குழு வலியுறுத்தியுள்ளது.
குடிமைப் பணிக்கு தகுதியான நபர்களை தேர்ந்தெடுக்கும் நடைமுறைக்கு 15 மாதங்கள் ஆகிறது. இது நீண்ட நெடிய தேர்வு நடைமுறையாக உள்ளது. இதனால், மாணவர்களின் பொன்னான காலம் வீணடிக்கப்படுகிறது.
Author: செய்திப்பிரிவு