சென்னை: "சிந்துவும் வைகையும் இம்மண்ணின் ஆதிப்பண்பாட்டின் தொடர்ச்சி. இந்துத்துவா சனாதானிகள் உருவாக்கும் ஆரிய – வைதீக கட்டுக்கதைகளை அடித்து நொறுக்கும் போர்க்களமாக சிந்துவும் வைகையும் இருக்கிறது.எனவேதான் “கீழடி எங்கள் தாய்மடி”என்று உரக்கச் சொன்னோம்" என்று மதுரை எம்.பி, சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "அரசியல் சாசனத்தின் முதல் அத்தியாயத்தின் முதல் படம் திமிலுள்ள காளை. அது சிந்துவெளி நாகரிகத்தின் அடையாளம்.அதே திமிலுள்ள காளை தான் கீழடி அருங்காட்சியத்திலும் துள்ளிகுதிக்கிறது.கீழடி அகழாய்வில் கண்டறியப்பட்ட எலும்புத்துண்டுகளை பகுப்பாய்வு செய்து திமிலுள்ள காளையைஅடையாளப்படுத்தியுள்ளனர்.கீழடியில் கிடைத்துள்ள குறியீட்டு எழுத்துகள் எண்பது சதவிகிதம் சிந்துவெளி குறியீடுகளோடு பொருந்துகிறது.
சிந்துவும் வைகையும் இம்மண்ணின் ஆதிப்பண்பாட்டின் தொடர்ச்சி. இந்துத்துவா சனாதானிகள் உருவாக்கும் ஆரிய- வைதீக கட்டுக்கதைகளை அடித்து நொறுக்கும் போர்க்களமாக சிந்துவும் வைகையும் இருக்கிறது என்று மதுரை எம்.பி, சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.
Authour: செய்திப்பிரிவு