கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற குள்ள ஆணழகனுக்கு திருமணம் 4 அடி உயர பெண்ணை மணந்தார்

6

மும்பை: உலகின் மிக குள்ளமான ஆணழகன் என்ற சாதனை படைத்த மகாராஷ்டிரா  இளைஞர் தன்னை விட உயரம் அதிகமான இளம்பெண்ணை மணந்தார். இந்த வீடியோ  சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. மகாராஷ்டிர மாநிலம் ராய்கட்டை சேர்ந்த இளைஞர்  பிரதிக் வித்தல் மோகிதே (28). இவர் உலகின் மிக குள்ளமான ஆணழகன் என்ற  சாதனையை கடந்த 2021ம் ஆண்டு பெற்றார். கின்னஸ் உலக சாதனை  புத்தகத்தில் இவர் இடம் பிடித்துள்ளார். பிரதிக் 3 அடி 4 இஞ்ச் உயரம் உடையவர்.  இந்த நிலையில் பிரதிக் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட  புகைப்படத்தால் வைரலானார். தன்னை போன்ற குள்ளமான அதே நேரத்தில் தன்னை விட  உயரம் அதிகமான ஜெயா (22) என்ற பெண்ணை மணந்தார். இந்த பெண்ணின் உயரம் 4 அடி 2  இஞ்ச். இந்த நிலையில் பிரதிக் தனது இன்ஸ்டா பக்கத்தில் மணமகன் உடையில்  மகிழ்ச்சியாக குத்தாட்டம் போடும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.  இந்த நிலையில் இந்த மாத தொடக்கத்தில் இரு வீட்டார் சம்மதத்துடன் நண்பர்கள்  முன்னிலையில் இருவரது திருமணம் நடந்தது.  இதையடுத்து தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். இது  தொடர்பாக பிரதிக் மேலும் கூறியதாவது: முதன்முதலில் நான் உடற்பயிற்சி  செய்வதை கடந்த 2012ல் துவக்கினேன். அப்போது எனது உயரத்துக்கு உடற்பயிற்சி  கருவிகள் கிடைக்காததால் மிக கஷ்டப்பட்டேன். இதையடுத்து முதன்முதலில் கடந்த  2016ல் ஆணழகன் போட்டியில் பங்கேற்றேன். எனது நண்பர்கள் ஆலோசனையின்  பேரில் கின்னஸ் சாதனை புத்தகத்திற்கு விண்ணப்பித்தேன். இதையடுத்து கடந்த  2021ம் ஆண்டில் உலகின் குள்ளமான ஆணழகன் என்ற பட்டம் எனக்கு கிடைத்தது.  ஜெயாவை கடந்த 4 ஆண்டுக்கு முன் சந்தித்தேன். அப்போதே காதலிக்க தொடங்கினேன்.  எனது கட்டுமஸ்தான உடல் அமைப்பை கண்டு அவரும் என்னை காதலிப்பதை உணர்ந்து  ெகாண்டேன். கடந்த வாரம் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். இவ்வாறு அவர்  தெரிவித்தார்.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.