சென்னை: நான் காவல் துறையில் 9 ஆண்டுகளாக சம்பாதித்து, சிறுகச் சிறுக சேர்த்து வைத்திருந்த பணம் அனைத்தையும் அரவக்குறிச்சி தேர்தலில் இழந்துவிட்டேன். தற்போது கடனாளியாக இருக்கிறேன் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அண்ணாமலை நேற்று கூறியதாவது: தமிழகத்தில் பணம் கொடுக்காமல் தேர்தலை சந்திக்கும் நேர்மையான அரசியல் வரத் தொடங்கியுள்ளது. பணம் கொடுத்து தேர்தலை சந்தித்துவிட்டு, நாங்கள் உன்னதமான அரசியல் செய்கிறோம் என்று கூறினால், மக்கள் சிரிப்பார்கள். தனி மனிதனாகவும், பாஜக மாநிலத் தலைவராகவும் அதில் எனக்கு உடன்பாடு இல்லை.
நான் காவல் துறையில் 9 ஆண்டுகளாக சம்பாதித்து, சிறுகச் சிறுக சேர்த்து வைத்திருந்த பணம் அனைத்தையும் அரவக்குறிச்சி தேர்தலில் இழந்துவிட்டேன். தற்போது கடனாளியாக இருக்கிறேன் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.
Author: செய்திப்பிரிவு