சென்னை: சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் தலைமைக் காவலரின் 10 வயது மகளுக்கு தவறான சிகிச்சை அளித்ததாக எழுந்துள்ள புகார் தொடர்பாக மருத்துவ கல்வி இயக்குநரகம் விசாரணை நடத்த காவல்துறை பரிந்துரை செய்துள்ளது.
ஆவடி காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் கோதண்டபாணி, சென்னை, ஓட்டேரி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றுகிறார். கடந்த 13-ம்தேதி சென்னை தலைமைச் செயலகம் அருகே தனது மகள் பிரதிஷாவுடன் (10) சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறுகையில், தனது மகள் பிரதிஷாவுக்கு சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் தலைமைக் காவலரின் 10 வயது மகளுக்கு தவறான சிகிச்சை அளித்ததாக எழுந்துள்ள புகார் தொடர்பாக மருத்துவ கல்வி இயக்குநரகம் விசாரணை நடத்த காவல்துறை பரிந்துரை செய்துள்ளது.
Author: செய்திப்பிரிவு