சண்டிகர்: காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங் நேபாளத்தில் பதுங்கியுள்ளார். இதுதொடர்பாக இந்திய தூதரகம் சார்பில் நேபாள அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.
பஞ்சாபைச் சேர்ந்த காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித் பால் சிங் ‘அனந்த்புர் கல்சா ஃபவுஜ்'என்ற பெயரில் தீவிரவாத குழுவை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுவந்தார். அவரை கைது செய்ய போலீஸார் முடிவு செய்தனர். இதையடுத்து அவர் தலைமறைவானார். கடந்த 18-ம் தேதி முதல் அம்ரித்பால் சிங் பல்வேறு வேடங்களில் சாலை, தெருக்களில் சுற்றித் திரியும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன.
காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங் நேபாளத்தில் பதுங்கியுள்ளார். இதுதொடர்பாக இந்திய தூதரகம் சார்பில் நேபாள அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.
Author: செய்திப்பிரிவு