சென்னை: ரிசர்வ் வங்கி மற்றும் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் இந்திய பொருளாதாரம் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான கலந்துரையாடல் விவாதம் சென்னை அடையாறில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வை ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியும், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவருமான என்.கோபாலசாமி தொடங்கி வைத்தார்.
கலந்துரையாடல் குழுவில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் பேராசிரியர் டி.ஜெயராமன், சென்னை பல்கலைக்கழகத்தின் பயன்பாட்டு புவியியல் பேராசிரியர் ஆர்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, பொருளாதாரப் பிரிவின் பேராசிரியர் கே.எஸ்.கவிகுமார், உலக வள நிறுவனத்தின் காலநிலை மாற்ற பிரிவின் இயக்குநர் ஏ.அறிவுடைநம்பி ஆகியோர் உறுப்பினர்களாக கலந்துகொண்டு கல்லூரி மாணவர்களுடன் விவாதித்தனர்.
ரிசர்வ் வங்கி மற்றும் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் இந்திய பொருளாதாரம் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான கலந்துரையாடல் விவாதம் சென்னை அடையாறில் நேற்று நடைபெற்றது.
Author: செய்திப்பிரிவு