பண்ருட்டி: ராகுல் காந்தியின் கருத்துக்களுக்கு மதிப்பிருக்கிறது, அவர் காந்தியத்தை கடைபிடித்தும் வருகிறார். எனவே பிரதமர் மோடிக்கும், பாஜகவுக்கும் அது அச்சத்தை கொடுக்கிறது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
பண்ருட்டியை அடுத்த முத்தாண்டிக்குப்பத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வந்திருந்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் கூறுகையில், "ராகுல் காந்திக்கு எதிராக தீர்ப்பு வாங்கப்பட்டிருக்கிறது. இதை எதிர்த்து மக்கள் மன்றத்திற்கு நீதிமன்றத்திற்கும் செல்ல விருக்கிறோம். மக்கள் மன்றமும், நீதிமன்றமும் எங்கள் பக்கம் இருக்கும் என நம்புகிறோம். நியாயம் வெல்லும் என்பது எங்கள் கருத்து.
ராகுல் காந்தியின் கருத்துக்களுக்கு மதிப்பிருக்கிறது, அவர் காந்தியத்தை கடைபிடித்தும் வருகிறார். எனவே பிரதமர் மோடிக்கும், பாஜகவுக்கும் அது அச்சத்தை கொடுக்கிறது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
Author: ந.முருகவேல்