சென்னை: "காஞ்சிபுரம் பட்டாசு ஆலையில் நடந்தது போல எதிர்காலத்தில் இதுபோன்ற கோர விபத்துகள் நடக்காமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் அரசின் செயல்பாடுகள் இருக்க வேண்டுமென்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன்" என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "காஞ்சிபுரம் பட்டாசு ஆலை விபத்துச் செய்தி மிகுந்த வேதனையை அளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்களுக்குத் தரமான சிகிச்சையும், பாதிக்கப்பட்டோருக்கு உரிய நிவாரணமும் உடனடியாக வழங்க வேண்டும்.
காஞ்சிபுரம் பட்டாசு ஆலையில் நடந்தது போல எதிர்காலத்தில் இதுபோன்ற கோர விபத்துக்கள் நடக்காமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் அரசின் செயல்பாடுகள் இருக்க வேண்டுமென்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
Author: செய்திப்பிரிவு