மதுரை: ஜி.கே. வாசன் காங்கிரஸ் கட்சிக்குதிரும்பினால் அவருக்குக் கீழ்பணியாற்றத் தயாராக இருக்கிறோம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி அழைப்பு விடுத்துள்ளார். மதுரையில் தமாகா, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் காங்கிரஸ் கட்சியில் இணையும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கே.எஸ்.அழகிரி பேசியதாவது: காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற ஜி.கே. மூப்பனார் போன்ற பல தலைவர்கள் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு திரும்பிய வரலாறு உண்டு. தமாகா தற்போது கொள்கை அடிப்படையில் இல்லாமல் தனி நபருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் செயல்படுகிறது.
ஜி.கே. வாசன் காங்கிரஸ் கட்சிக்குதிரும்பினால் அவருக்குக் கீழ்பணியாற்றத் தயாராக இருக்கிறோம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி அழைப்பு விடுத்துள்ளார்.
Author: செய்திப்பிரிவு