தஞ்சாவூர்: சோழர்கள் போருக்கு பயன்படுத்திய இன நாய் முதல் புதிய இன நாய்கள் வரையிலான 200 நாய்கள் கலந்துகொண்ட கண்காட்சியை தஞ்சை மக்கள் பலரும் ஆர்வத்துடன் ரசித்தனர்.
தஞ்சாவூர் அருகே மாதாகோட்டை பகுதியில் உள்ள மிருகவதை தடுப்பு சங்கத்தில், கால்நடை பாரம்பரிய துறையும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து, நாய்கள் கண்காட்சியினை இன்று (மார்ச் 11) நடத்தினர். கண்காட்சியை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் துவக்கி வைத்தார். இக்கண்காட்சியில், சிம்பா, அலங்கு, டாபர்மேன், லேபர் டாக், கிரேடன், ஜெர்மன் ஷெப்பர்ட், சிப்பி பாறை, கோம்பை, போலீஸ் மோப்ப நாய்கள் உள்ளிட்ட 200 நாய்கள் பங்கேற்றன. இக்கண்காட்சியினை பள்ளி மாணவ,மாணவிகள், பொதுமக்கள் ஆர்வத்துடன் ரசித்தனர்.
சோழர்கள் போருக்கு பயன்படுத்திய நாய் முதல் புதிய இன நாய்கள் வரையிலான 200 நாய்கள் கலந்துக்கொண்ட கண்காட்சியினை பொதுமக்கள் பலரும் ஆர்வத்துடன் ரசித்தனர்.
Authour: வி.சுந்தர்ராஜ்