மதுரை: மதுரை வைகை ஆற்றில் சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் ஆழ்வார்புரத்தில் கழிவு நீர் பெருக்கெடுத்து கலக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் திருவிழா நேரத்தில் மட்டுமே இப்பகுதியில் கழிவு நீர் வருவதை தடுத்து திசைமாற்றிவிடப்படும் நிலையில், இந்த ஆண்டாவது நிரந்தரமாக கழிவு நீர் கலப்பதை தடுக்க மாநகராட்சி, மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்குமா என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
மதுரையையும், வைகை ஆற்றையும் பிரித்துப்பார்க்க முடியாது. ஆற்றங்கரையில் அமைந்துள்ள நகரமாாக இருப்பதால் ஆண்டு முழுவதுமே மதுரையில் திருவிழாக்களுக்கு பஞ்சமிருக்காது. அதனாலே, மதுரை திருவிழாக்களின் நகராக போற்றப்படுகிறது. அதில் முக்கிய திருவிழாவான சித்திரைத்திருவிழா, வைகை ஆற்றில் கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழாவில் அழகர் கோயிலில் இருந்து எதிர்சேவை வரும் கள்ளழகர், அழ்வார்புரம் பகுதியில் ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள். இந்த நிகழ்ச்சி சித்திரைத்திருவிழாவில் விமர்ச்சையாக கொண்டாடப்படுகிறது.
மதுரை வைகை ஆற்றில் சித்திரைத்திருவிழாவில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் ஆழ்வார்புரத்தில் கழிவு நீர் பெருக்கெடுத்து கலக்கிறது.
Author: ஒய். ஆண்டனி செல்வராஜ்