பிஹாரில் கடந்த வெள்ளிக்கிழமை கள்ளச்சாராயம் குடித்ததால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 26 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கள்ளச்சாராயம் குடித்துவிட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு / நிதி உதவி வழங்க மறுத்து வந்த முதல்வர் நிதிஷ் குமார், தற்போது முதன்முறையாக இழப்பீடு / நிதி உதவி வழங்க முன்வந்துள்ளார். முதல்வரின் இந்த அறிவிப்பின் பின்னணி குறித்தும், அரசியல் ரீதியில் அவருக்கு எழுந்துள்ள எதிர்ப்பு குறித்தும் சற்றே விரிவாகப் பார்ப்போம்.
இந்திய அரசியல் சாசனத்தில் மாநிலப் பட்டியலின் கீழ் வரக்கூடியது மது. உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் மதுவை மருத்துவக் காரணங்களுக்காக இன்றி போதைக்காக பயன்படுத்துவதை தடுக்க சட்டம் இயற்ற வேண்டும் என்று சட்டப் பிரிவு 47 மாநில அரசுகளுக்கு அறிவுறுத்துகிறது. என்றாலும், தமிழ்நாடு உள்பட இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. மது விற்கப்படும் மாநிலங்களில் அதன் மூலம் கிடைக்கும் வருவாய் அந்தந்த மாநிலங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. இதில், விதிவிலக்காக குஜராத், நாகாலாந்து, மிசோரம், பிகார் ஆகிய 4 மாநிலங்கள் மட்டுமே உள்ளன. இந்த மாநிலங்களில் மட்டுமே மதுவிலக்கு அமலில் உள்ளது.
பிஹாரில் கடந்த வெள்ளிக்கிழமை கள்ளச்சாராயம் குடித்ததால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 26 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கள்ளச்சாராயம் குடித்துவிட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு / நிதி உதவி வழங்க மறுத்து வந்த முதல்வர் நிதிஷ் குமார், தற்போது முதன்முறையாக இழப்பீடு / நிதி உதவி வழங்க முன்வந்துள்ளார்.
Author: பால. மோகன்தாஸ்