Advertisement
கள்ளக்குறிச்சி: சங்கராபுரத்தில் பேருந்து நிலை யத்தை ஆக்கிரமித்து திமுக பொதுக்கூட்டம் நடத்தியதால் மக்கள் கடும் அவதியடைந்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் நேற்று திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற் றது. இக்கூட்டத்திற்காக பேருந்து நிலையப் பகுதியில் பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டு, கூட் டத்திற்கு வருவோர் அமர பேருந்துநிலையம் முழுவதும் நாற்காலிகள் போடப்பட்டு, ஆக்கிரமிக்கப் பட்டிருந்தது.
திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கச்சிராயப் பாளையம் மார்க்கமாக செல்லும் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். மேலும் பேருந்துகள் ஆங்காங்கே சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டதால், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு தள்ளப்பட்டனர்.
Author: செய்திப்பிரிவு
Advertisement