கோவில்பட்டி: கயத்தாறு அருகே அய்யனார் ஊத்து ஊராட்சியில் நடந்த சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில், கல்குவாரிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு இன்று கயத்தாறு ஊராட்சி ஒன்றியம் அய்யனார் ஊத்து கிராமத்தில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடந்தது. ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் காலை 11 மணிக்கு தொடங்கிய கூட்டத்துக்கு ஊராட்சித் தலைவர் எம். சண்முகையா தலைமை வகித்தார். கூட்டத்தில், கயத்தாறு வட்டார வளர்ச்சி அலுவலர் (பொறுப்பு) சையத் மகபூப் லால், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பரமன் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
கயத்தாறு அருகே அய்யனார்ஊத்து ஊராட்சியில் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கல்குவாரிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Author: எஸ்.கோமதி விநாயகம்