புதுச்சேரி: புதுச்சேரியில் பள்ளிக் குழந்தைகளுக்கு கலைகளை இலவசமாக கற்றுத்தரும் பால்பவனை தொகுதி தோறும் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழத்தொடங்கியுள்ளது.
அதே நேரத்தில் இங்கு பல பணியிடங்கள் காலியாக உள்ளன. ஒரே நாளில் இரு இடங்களில் பணியாற்றும் சூழலில் பால்பவன் ஆசிரியர்கள் இருக்கும் நிலையும் நீடிக்கிறது. புதுச்சேரி பழைய பேருந்து நிலையம் அருகே தாவரவியல் பூங்காவையொட்டி ஜவகர் பால்பவன் அமைந்துள்ளது. இங்கு கடந்த 1973-ம் ஆண்டு முதல், பள்ளி செல்லும் 6 முதல் 16 வயது வரையுள்ள சிறுவர்களுக்கு கலைகளை கட்டணமின்றி கற்பித்து வருகின்றனர்.
புதுச்சேரியில் பள்ளிக் குழந்தைகளுக்கு கலைகளை இலவசமாக கற்றுத்தரும் பால்பவனை தொகுதி தோறும் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழத்தொடங்கியுள்ளது. அதே நேரத்தில் இங்கு பல பணியிடங்கள் காலியாக உள்ளன
Author: செ. ஞானபிரகாஷ்