சென்னை: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் தலைமறைவாக இருந்த கலாஷேத்ரா கல்லூரி பேராசிரியர் ஹரிபத்மன் கைது செய்யப்பட்டார். அவரை ஏப்.13 வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா நாட்டிய கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்குபேராசிரியர்களால் பாலியல் தொல்லை அளிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்தொடர்ந்து, பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பேராசிரியர் ஹரி பத்மன்,உதவியாளர்கள் சாய் கிருஷ்ணன், சஞ்ஜித் லால், நாத்ஆகிய 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவிகள், கல்லூரி வளாகத்தில் தொடர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் தலைமறைவாக இருந்த கலாஷேத்ரா கல்லூரி பேராசிரியர் ஹரிபத்மன் கைது செய்யப்பட்டார். அவரை ஏப்.13 வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது.
Author: செய்திப்பிரிவு