''நோயையும் வலியையும் பொறுத்துக்கறதில அதுக்கு இருக்கிற கம்பீரத்தைப் பாத்தா கண்ணுல தண்ணி வந்திடும். உயிர் போற வலி இருந்தாலும் அது அலறாது. துடிக்காது. கண்மட்டும் நல்லா சுருங்கி இருக்கும். உடம்பு அங்கங்க அதிரும்''- 'யானை டாக்டர்' சிறுகதையில், வரும் ஜெயமோகனின் வரிகள் இவை.
கேரளாவில் வெடிமருந்து வைக்கப்பட்ட அன்னாசியைச் சாப்பிட்டு உயிரிழந்த கர்ப்பிணி யானை குறித்த அறிமுகம் தேவையில்லை. மனிதர்களை நம்பி அவர்கள் கொடுத்த உணவைச் சாப்பிட்ட யானை, அதற்கு இத்தனை பெரிய விலையைக் கொடுத்திருக்கிறது.
இதற்குப் பழகிய யானை, இன்னும் சில யானைகளுடன் சேர்ந்து உணவுக்காக மனிதர்கள் வாழும் பகுதிக்கு வந்து காத்திருக்கிறது. காட்டின் பேரரசனைப் பிச்சை எடுக்க வைத்துவிட்டோமே என்று வேதனையாக இருக்கிறது.
க.சே.ரமணி பிரபா தேவி