புதுடெல்லி: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி இன்று (மார்ச் 29) வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கர்நாடக சட்டப்பேரவைக்கு இந்த ஆண்டு மே மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இந்நிலையில் தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று கர்நாடக தேர்தல் தேதியை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய பிரதான கட்சிகள் தனித் தனியாக களமிறங்குகின்றன. 3 கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தை ஏற்கெனவே தொடங்கியுள்ள நிலையில், வேட்பாளர் தேர்வில் ஈடுபட்டுள்ளன. மஜத, ஆம் ஆத்மி, எஸ்டிபிஐ ஆகிய கட்சிகள் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, அவர்களை முன்னிறுத்தி பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன‌.
கர்நாடக சட்டப்பேரவைக்கு இந்த ஆண்டு மே மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இந்நிலையில் தேர்தல் ஆணையம் இன்று கர்நாடக தேர்தல் தேதியை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Author: செய்திப்பிரிவு