கர்நாடகா: கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரத்தின் போது மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே சிவகுமார் ரூ.500 நோட்டுகளை வீசியெறிந்து காட்சிகள் வெளியாகியுள்ளன. சட்டப்பேரவை தேர்தலை சந்திக்கும் கர்நாடகாவில் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்து வருகிறது. ஆட்சியை தக்க வைக்க பாஜக வியூகம் வகுத்து வரும் நிலையில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றிவிட காங்கிரஸ் முனிப்பு காட்டுகிறது. இதற்காக மாநிலமெங்கும் அக்கட்சி சார்பில் மக்களின் குரல் என்ற யாத்திரை நடத்தப்படுகிறது. இதன்படி மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவகுமார் திறந்தநிலை பிரச்சார பேருந்தில் யாத்திரை சென்றார். அப்போது அவர்கள் பொதுமக்கள் மீது ரூ.500 நோட்டுகளை வீசியெறிந்த காட்சிகள் வெளியாகியுள்ளன. கர்நாடகாவில் ஆளும் பாஜக மீது முறைகேடு உட்பட பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்து காங்கிரஸ் கட்சி பிரச்சாரம் மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் மாநில தலைவர் பொது மக்கள் மீது பணத்தை வீசிய விவகாரத்தை பாஜக விமர்சிக்க தொடங்கியுள்ளது.
கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரத்தின் போது மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே சிவகுமார் ரூ.500 நோட்டுகளை வீசியெறிந்த காட்சிகள் வெளியீடு
Advertisement
Advertisement