புதுடெல்லி: கர்நாடகா தேர்தலில் போட்டியிட இருக்கும் வேட்பாளர்கள் மற்றும் தலைவர்களின் வீடுகளில் சோதனை நடத்த அம்மாநிலத்திற்கு புலனாய்வு அமைப்புகளை மத்திய அரசு அனுப்பி இருப்பதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. ரன்தீப் சுர்ஜ்வாலா கூறியதாவது: கர்நாடகா தேர்தலில் பாஜக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தங்களின் தொகுதிகளில் போட்டியிட மறுத்து வருகின்றனர். இதனால் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க அக்கட்சி திணறிவருகிறது இதுகுறித்த ஆதாரம் எங்களிடம் இருக்கிறது. கர்நாடகாவில் மிகப்பெரிய அளவில் பாஜகவினர் கட்சியில் இருந்து வெளியேறி வருகின்றனர். 10க்கும் அதிமாக எம்எல்ஏக்கள், எம்எல்சிக்கள், முன்னாள் எம்எல்ஏ, எம்எல்சி.,க்கள், வாரியம் மற்றும் கார்ப்பரேஷன் தலைவர்கள் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸில் இணைந்து வருகின்றனர்.
கர்நாடகா தேர்தலில் போட்டியிட இருக்கும் வேட்பாளர்கள் மற்றும் தலைவர்களின் வீடுகளில் சோதனை நடத்த அம்மாநிலத்திற்கு புலனாய்வு அமைப்புகளை மத்திய அரசு அனுப்பி இருப்பதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
Author: செய்திப்பிரிவு