சீனாவில் வுஹான் நகரம் மூலம் பரவிய கரோனா வைரஸ் உலக நாடுகள் பலவற்றுக்கும் பரவி வருவதால் உலக சுகாதார அமைப்பு சுகாதார நெருக்கடி நிலையைப் பிரகடனம் செய்துள்ளது. சீனாவில் இன்று (ஜன.31) வரை 213 பேர் இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். சீனாவில் 30-ம் தேதி வரை 7,711 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக, அதிகாரபூர்வமான புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
தைவான், தாய்லாந்து, வியட்நாம் போன்ற நாடுகளிலும் கரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த நிலையில், நேற்று (ஜன.30) வுஹானில் இருந்து கேரளா வந்த மாணவி ஒருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. அவர் தற்போது திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனியாக அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்.
“தமிழகத்தில் யாருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பில்லை. அதனால், மக்கள் பீதியடைய வேண்டாம்”
நந்தினி வெள்ளைச்சாமி