காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு குறித்து மக்கள் பீதியடையும் அளவுக்கு எதுவுமில்லை எனவும், முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படவில்லை என்றும் மாவட்ட ஆட்சியர் ஏ.குலோத்துங்கன் கூறியுள்ளார்.
காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 35 வயது பெண் ஒருவர், மூளையில் ஏற்பட்ட கட்டி காரணமாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் கரோனா தொற்று இருப்பது கடந்த 1-ம் தேதி கண்டறியப்பட்டது. 2-ம் தேதி இரவு அவர் உயிரிழந்தார். இதையடுத்து மாவட்டத்தில் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளியை பின்பற்றவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியிருந்தது.
காரைக்கால் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு குறித்து மக்கள் பீதியடையும் அளவுக்கு எதுவுமில்லை எனவும், முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படவில்லை என்றும் மாவட்ட ஆட்சியர் ஏ.குலோத்துங்கன் கூறியுள்ளார்.
Author: வீ.தமிழன்பன்