வாழ்க்கையில் எத்தனை போராட்டங்கள் வந்தாலும், நமக்கு நாமே தைரியம் சொல்லிக்கொள்கிற துணிவு இருந்தால் போதும், எதையும் கடந்து விடலாம். உறவுகள் என்று பெரிதாக யாரும் இல்லாமல், தைரியத்தையும், துணிச்சலையும் மட்டுமே மூலதனமாக வைத்து, ஆதரவில்லாமல் தவிப்பவர்களுக்கு ஆதரவாக இருந்து வருகிறார் மீனா சத்தியமூர்த்தி. நம்மிடம் அவர் பகிர்ந்தவை…
“என் சொந்த ஊர் கரூர். அப்பாவும், அம்மாவும் நான் குழந்தையாக இருக்கும்போதே இறந்துவிட்டார்கள். தாத்தா, பாட்டியிடம்தான் நான் வளர்ந்தேன். எந்த குறையும் தெரியாமல் தான் என்னை வளர்த்தார்கள். நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது, என் தாத்தாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட காரணத்தினால், எனக்கு உடனே கல்யாணம் பண்ண வேண்டிய நிர்பந்தம். என் வாழ்க்கையே திசைமாற்றிய சம்பவம் திருமணம்.
துணிவு இருந்தால் போதும், எதையும் கடந்து விடலாம். உறவுகள் என்று பெரிதாக யாரும் இல்லாமல், தைரியத்தையும், துணிச்சலையும் மட்டுமே மூலதனமாக வைத்து, ஆதரவில்லாமல் தவிப்பவர்களுக்கு ஆதரவாக இருந்து வருகிறார் மீனா சத்தியமூர்த்தி.
Authour: ஜி.காந்தி ராஜா