சென்னை: கரோனா தொற்று பாதிப்புக்கு பிறகுசர்க்கரை நோய், ஞாபக மறதி,சுவாச கோளாறு உள்ளிட்ட பிரச்சினைகள் பொதுமக்களிடையே அதிகரித்துள்ளதாக அப்போலோ மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சுவாச மண்டலம் தொடர்பாக அப்போலோ மருத்துவமனையின் சார்பில் நெஞ்சக சிகிச்சைக்கான உச்சி மாநாடு-2023 சென்னையில் நேற்று நடைபெற்றது.
மருத்துவமனையின் மூத்த சுவாச மண்டலநிபுணர் ஆர்.நரசிம்மன் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் நெஞ்சக சிகிச்சைத்துறை மருத்துவ நிபுணர்கள் பலர் கலந்து கொண்டு கரோனா காலத்தில் ஏற்பட்ட பாதிப்புகள், வயது வந்தோருக்கான தடுப்பூசி, ஆஸ்துமா, இன்ப்ளூயன்சா பாதிப்பு, சுவாச நோய்கள் உள்ளிட்டவை குறித்து கலந்துரையாடினர்.
கரோனா தொற்று பாதிப்புக்கு பிறகுசர்க்கரை நோய், ஞாபக மறதி,சுவாச கோளாறு உள்ளிட்ட பிரச்சினைகள் பொதுமக்களிடையே அதிகரித்துள்ளதாக அப்போலோ மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Author: செய்திப்பிரிவு