Advertisement
கிராமங்களில் விவசாய வேலையை மட்டுமே நம்பி வாழும் கூலித் தொழிலாளர்களுக்கு அன்றாட வருமானமே வாழ்வாதாரமாக இருக்கிறது. கரோனா வைரஸும் ஊரடங்கும் அவர்களின் அன்றாடத்தைப் புரட்டிப் போட்டிருக்கின்றன.
தமிழகம் முழுவதுமே விவசாயக் கூலிகளாக இருப்பவர்களில் பெரும்பான்மையானோர் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள். இளைஞர்களும் பெண்களும் சிறு, பெரு நகரங்களுக்கு வேலைக்குச் சென்றுவிடுகின்றனர். ஜவுளிக் கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள், உணவகங்கள், கட்டிட வேலை என அவர்களின் வேலை மாறிவிடுகிறது.
தஞ்சாவூர், நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா பகுதிகளில் விவசாயக் கூலிகள் சுமார் 12 லட்சம் பேர் இருக்கின்றனர். அவர்கள் வேலைக்குப் போனால்தான் உணவு.
க.சே.ரமணி பிரபா தேவி
Advertisement