புதுடெல்லி: கரோனா பாதிப்புக்கும் மாரடைப் புக்கும் தொடர்பு இருக்கிறதா என ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியதாவது: கரோனா வைரஸ் உருமாறிக் கொண்டே இருக்கிறது. இந்தியா வில் இதுவரை 214 வகைகள் கண்டறியப்பட்டுள்ளன. சமீபத்தில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.ஒமைக்ரானின் திரிபான பிஎப்.7வகை வைரஸும் எக்ஸ்பிபி1.16வகை வைரஸும் கடைசியாக கண்டறியப்பட்டுள்ளன. இவைதான் இப்போதைய கரோனா பரவலுக்கு காரணமாக உள்ளன. எனினும், இவற்றால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது.
கரோனா பாதிப்புக்கும் மாரடைப் புக்கும் தொடர்பு இருக்கிறதா என ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
Author: செய்திப்பிரிவு