Advertisement
சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, சென்னை வேளச்சேரியில் நடைபெற்ற மருத்துவ முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னையில் நாளை (மார்ச் 17) பிரம்மாண்டமான முறையில் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. அதில், தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் முதல், உயர் அலுவலர்கள் வரை 5 ஆயிரம் பேருக்கு முழு உடல் பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த முகாமை முதல்வர்தொடங்கிவைக்க உள்ளார்.
இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இதனால், பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையிலோ அல்லது தீவிர சிகிச்சைப் பிரிவிலோ அனுமதிக்கும் நிலை இதுவரை ஏற்படவில்லை.
Author: செய்திப்பிரிவு
Advertisement