சென்னை: ஈரோடு கிழக்கு எம்எல்ஏ ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கரோனாவில் இருந்து மீண்டுவிட்டதாகவும், இதய பாதிப்புக்கு மட்டும் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன். கடந்த 15-ம் தேதி இரவு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டதால், சென்னை போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இளங்கோவன் குணமடைந்து வருவதாகவும், இரண்டு நாளில் வீடு திரும்புவார் எனவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இளங்கோவனுக்கு கரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது.
ஈரோடு கிழக்கு எம்எல்ஏ ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கரோனாவில் இருந்து மீண்டுவிட்டதாகவும், இதய பாதிப்புக்கு மட்டும் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Author: செய்திப்பிரிவு