சென்னை: ராகுல் காந்தி மீதான தகுதி இழப்பு நடவடிக்கையை கண்டித்து தமிழக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் கருப்பு சட்டையில் சட்டப்பேரவைக்கு வந்தனர். இதுதொடர்பாக சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை பேசியது, அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதால் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு குஜராத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்ததை அடுத்து, மக்களவை எம்.பி. பதவியை அவர் இழந்துள்ளார். இதை கண்டித்து, நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தமிழக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் நேற்று கருப்பு உடை அணிந்தும், ராகுல் காந்தி மீதான தகுதி இழப்பு நடவடிக்கைக்கு எதிரான வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தியும் சட்டப்பேரவைக்கு வந்தனர்.
ராகுல் காந்தி மீதான தகுதி இழப்பு நடவடிக்கையை கண்டித்து தமிழக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் கருப்பு சட்டையில் சட்டப்பேரவைக்கு வந்தனர். இதுதொடர்பாக சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை பேசியது, அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதால் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
Author: செய்திப்பிரிவு