பெண் உடலை உறிஞ்சி எடுக்கும் ‘தண்ணீர் நோய்மை’ பெண்களின் கல்வி, வேலைத்திறன், உற்பத்தி அளவு, பெண்களின் பொருளாதாரப் பாதுகாப்பு என மிகப்பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் கொந்தளிப்புடன் பேசப்படும் தண்ணீர் பஞ்சத்தின் முக்கியமான சமூக அவலம், தண்ணீர் நோய்மையால் அதிகரித்து வரும் பாலின அசமத்துவம். வறண்ட தொண்டையுடன், தண்ணீருக்காக பல மணிநேரங்களைச் செலவிடும் தமிழ்நாட்டுப் பெண்களின் கதைகளைக் கேட்டு காகிதத்தை எடுக்கும்போதே பேனா மூச்சிரைக்கிறது.
சென்னை யானைக்கவுனியைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவி ஜெனிதா, தலைநகரின் மிக மோசமான தண்ணீர் நெருக்கடியின் உச்சபட்ச விளைவுகளை இந்நாட்களில் அனுபவித்துக் கொண்டிருக்கிறார். தன் வீட்டின் ஒருநாள் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்ய அவர் தன் படிப்பை விலை கொடுக்க வேண்டியிருக்கிறது. மாலை நேரத்தில் தன் குடியிருப்பின் அருகில் உள்ள தண்ணீர் டேங்கில் தண்ணீர் பிடிக்க வந்தார் ஜெனிதா. மாலையில் பள்ளி முடிந்ததும் வீட்டில் தன் உடைமைகளை வைத்துவிட்டு, பள்ளிச் சீருடையைக் கூட ஜெனிதா மாற்றவில்லை. தண்ணீர் பிடிக்கும்போது பெண்களுக்குள் ஏற்படும் காட்டமான விவாதங்களுக்கிடையில் ஜெனிதாவிடம் பேசுவது சற்று சிரமமாகவே இருந்தது.
வறண்ட தொண்டையுடன், தண்ணீருக்காக பலமணிநேரங்களைச் செலவிடும் தமிழ்நாட்டுப் பெண்களின் கதைகளைக் கேட்டு காகிதத்தை எடுக்கும்போதே பேனா மூச்சிரைக்கிறது.
நந்தினி வெள்ளைச்சாமி