Advertisement
டொரண்டோ: காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங் தலைமறைவான நிலையில் கனடாவின் ஒன்டோரியோ நகரில் காந்தி சிலையை காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிதைத்துள்ளனர்.
வெண்கலத்தால் 6 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த காந்தி சிலையின் முகம் சிதைக்கப்பட்டுள்ளது. மேலும் சிலையின் மீது பெயிண்டை ஊற்றி நாசம் செய்துள்ளனர். மேலும் இந்திய அரசு, பிரதமர் மோடி ஆகியோருக்கு கண்டனமும் தெரிவித்து வாசகங்களை சிலையின் அடிப்பாகத்தில் எழுதியுள்ளனர். காந்தி கையில் உள்ள தடியில் காலிஸ்தான் கொடியை பறக்கவிட்டுள்ளனர்.
காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங் தலைமறைவான நிலையில் கனடாவின் ஒன்டோரியோ நகரில் காந்தி சிலையை காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிதைத்துள்ளனர்.
Author: செய்திப்பிரிவு
Advertisement