கூடலூர்: கண்ணகி கோயில் சித்திரை மாத பவுர்ணமி திருவிழா மே 5-ல் நடை பெற உள்ளது. இதற்காக பிற்பகல் 2.30 மணி வரையே கோயிலுக்குச் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். அதிக பக்தர்கள் குறுகிய நேரத்தில் சென்று திரும்ப வேண்டி இருப்பதால் கடும் நெரிசல் ஏற்படும் என்று பக்தர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ள்ளனர்.
தமிழக எல்லையான கூடலூர் மேற்குத் தொடர்ச்சி மலையில் விண்ணேற்றிப்பாறை எனும் இடத்தில் மங்கலதேவி கண்ணகி கோயில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத பவுர் ணமி அன்று இங்கு திருவிழா நடைபெறும். முன்னதாக தமிழக, கேரள அதிகாரிகள் சார்பில் முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இதன்படி தேக்கடியில் நேற்று இக்கூட்டம் நடைபெற்றது.
கண்ணகி கோயில் சித்திரை மாத பவுர்ணமி திருவிழா மே 5-ல் நடை பெற உள்ளது. இதற்காக பிற்பகல் 2.30 மணி வரையே கோயிலுக்குச் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
Author: என்.கணேஷ்ராஜ்