"ஒரு ஊர்ல ஒரு கோயில் இருந்தது. அந்தக் கோயில் ரொம்பவே சேதமடைந்து இருந்ததாம். அப்போது, ஊர் பெரியவர்கள, தர்மகர்த்தா எல்லாரும் சேர்ந்து கூட்டம் போட்டிருக்காங்க. அந்தக் கூட்டத்தில் கோயிலைக் கட்ட சில தீர்மானங்களைப் போடிருக்காங்க. முதல் தீர்மானம் புதிய கோயில் கட்டுவது, இரண்டாவது தீர்மானம் கோயில் இருந்த இடத்திலேயே, அது அமைந்த திசையிலேயே, அதன் அளவிலேயே புதிய கோயிலையும் கட்டுவது, 3-வது தீர்மானம் கோயிலில் உள்ள சிலைகள், அலங்காரப் பொருட்களைப் புதிய கோயிலுக்கும் பயன்படுத்துவது. 4-வதாக ஒரு தீர்மானம் போட்டார்கள். அதாவது, புதிய கோயிலைக் கட்டும்வரை பழைய கோயிலை இடிப்பது இல்லை என்பதே அந்தத் தீர்மானம்"
பேராசிரியர் டாக்டர் பாண்டிகுமார் இந்தக் கதையைத் தனது கல்லூரி மாணவர்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் முதல் வகுப்பில் முதல் கதையாகச் சொல்கிறார்.
இளைஞர்கள் எல்லோருக்குமே எதிர்கால கனவு இருக்கும். ஆனால் அந்தக் கனவுக்கு எது தடையாக இருக்கிறதோ அதைவிட்டுத்தர மனம்தான் இருக்காது. செல்ஃபோன், ஃபேஸ்புக், முதிர்ச்சியற்ற காதல், கெட்ட சகவாசம் என பல்வேறு தடைகளுக்குள் நீங்கள் சிக்கியிருக்கலாம்…
பாரதி ஆனந்த்