பெங்களூரு: ‘‘நாட்டு மக்களுக்கு சிறந்த அடிப்படை கட்டமைப்பு வசதிகளை வழங்குவதில் நான் கவனம் செலுத்துகிறேன்’’ என பெங்களூரு – மைசூரு தேசிய நெடுஞ்சாலையை நாட்டுக்கு அர்ப்பணித்து பிரதமர் மோடி தெரிவித்தார்.
கர்நாடகாவில் ஓரிரு மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி கடந்த ஜனவரியில் இருந்து 6-வது முறையாக நேற்று கர்நாடகாவுக்கு வந்தார். காலை 11.30 மணியளவில் மைசூரு விமான நிலையத்துக்கு வந்த பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மண்டியாவுக்கு சென்றார். அங்குள்ள ஐ.பி. சதுக்கத்தில் இருந்து 2 கிமீ தூரத்துக்கு மோடி திறந்த காரில் நின்றவாறு ஊர்வலமாக சென்றார். அப்போது சாலையின் இருபுறங்களிலும் திரண்டிருந்த ஆயிரக்க‌ணக்கான பாஜக தொண்டர்கள் மோடியின் மீதுபூக்களைத் தூவி வரவேற்ற‌னர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாது, அவரை வாழ்த்தி முழக்கங்களை எழுப்பினர். பதிலுக்கு மோடி, வாகனத்தின் மீது குவிந்திருந்த பூக்களை அள்ளி தொண்டர்களின் மீது வீசி உற்சாகப்படுத்தினார்.
‘‘நாட்டு மக்களுக்கு சிறந்த அடிப்படை கட்டமைப்பு வசதிகளை வழங்குவதில் நான் கவனம் செலுத்துகிறேன்’’ என பெங்களூரு – மைசூரு தேசிய நெடுஞ்சாலையை நாட்டுக்கு அர்ப்பணித்து பிரதமர் மோடி தெரிவித்தார்.
Author: இரா.வினோத்