மதுரை: குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தடுக்க வலியுறுத்தி நாடு முழுவதும் கேரள இளைஞர் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் சிறந்த ஓவியர் என்பதால் தினமும் ஓவியங்கள் வரைந்து விற்று, அதன்மூலம் கிடைக்கும் வருவாய் மூலம் அவர் இந்த விழிப்புணர்வு பயணத்தைப் மேற்கொண்டுள்ளார்.
கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்தவர் அசன் ஜாகீர் வயது 23. இன்டீரியர் டிசைனிங் பி.எஸ்.சி பட்டப் படிப்பு முடித்துள்ளார். இவரது தந்தை பெயின்ட்டிங் வேலை பார்க்கிறார். சிறிய வயதிலேயே அசன் ஜாகீர் சமூக சேவைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். அதனால், தன்னை தற்போது முழுமையாக சமூகப் பணிகளில் ஈடுபடுத்திக் கொண்டார். குழந்தைகள் பாலியல் வன்கொடுமைகளால் இந்தியா முழுவதும் பாதிக்கப்படுவதை அறிந்து அவர் அதை தடுக்க வலியுறுத்தி கடந்த வாரம் திருச்சூரில் இருந்து சைக்கிள் பயணம் தொடங்கினார்.
குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தடுக்க வலியுறுத்தி நாடு முழுவதும் கேரள வாலிபர் சைக்கிள் பயணம் மேற்கொண்டு உள்ளார்.
Authour: ஒய். ஆண்டனி செல்வராஜ்