மதுரை; கடந்த ஓர் ஆண்டில் உலகம் முழுவதும் 1.6 கோடி பேர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று காசநோய் தினத்தில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் ரத்தினவேலு அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நுரையீரல் மருத்துவத் துறையும், மதுரை மாவட்ட தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டமும் இணைந்து மருத்துவமனையில் பணிபுரியும் சுகாதாரப் பணியாளர்களுக்கு தீவிர காச நோய் கண்டறியும் முகாமை நடத்தினர். இந்த மருத்துவ முகாமை மருத்துவமனை முதல்வர் ஏ.ரத்தினவேலு தொடங்கி வைத்தார். மருத்துவமனை கண்காணிப்பாளர் வி.ஆர்.கணேசன் முன்னிலை வகித்தார்.
கடந்த ஒரு ஆண்டில் உலகம் முழுவதும் 1.6 கோடி பேர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று காசநோய் தினத்தில் மருத்துவமனை ‘டீன்’ ரத்தினவேலு அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.
Authour: ஒய். ஆண்டனி செல்வராஜ்